கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் அதிநவீன படகுகளுடனா் பேரிடர் மீட்புக்குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்
\ மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன், மீனவர்களுக்கான பத்து அம்ச கோரிக்கைகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பருவ மழை தொடங்க உள்ள சூழலில் மீண்டும் ஒரு பேரிடராக புயல் உருவாகலாம் என்பதால் \அனைத்து மீனவர் கிராமங்களிலும் கடல் நீர் புகுவதை தடுக்க பாறைக்கற்களுக்கு பதிலாக ஆறு மூலை கான்கிரிட் சுவர் கட்ட வேண்டும், பேராபத்துக்களில் மீனவர்களை காப்பாற்ற வழங்கப்படும் சேட்டிலைட் போன் மோசமான வானிலையில் சிக்னல் இழப்பதால் விசைப்படகு நாட்டுப்படகு மீன்வர்களுக்கு ரேடியோ டெலிபோன் வழங்க வேண்டும், மீனவர்கள் உயிரை காக்க மிதவை கவசம் வழங்க வேண்டும்,கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்களை அவசர நேரங்களில் தொடர்பு கொள்ள வசதியாக சக்தி வாய்ந்த தொலைத்தொடர்பு மையம் அமைக்க வேண்டும்
கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க ஒரு ஹெலிகாப்டர் அதிவேக படகுகளுடன் பேரிடர் மீட்புக்குழு அமைக்க வேண்டும், மீனவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்க கடல் ஆம்புலன்ஸ் அமைக்க வேண்டும், , கடற்படையில் தகுதியான மீனவர்களை சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்
கமல்ஹாசனின் 10 அம்ச கோரிக்கைகள்