2 கோடி குடும்பங்களுக்கு விரைவில் முகக்கவசம்

தமிழகத்தில்  2 கோடி குடும்ப அட்டைகளுக்கு  தரமான முகக்கவசங்கள்   வெகுவிரைவில் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார் 


திருவொற்றியூர் மாநகராட்சி மண்டலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், தமிழக முதலமைச்சர்  எடப்பாடி கே.பழனிசாமி, குடும்ப அட்டைகளுக்கு  முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார் அதன் அடிப்படையில்  அதற்கான பணிகள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் வெகுவிரைவில் தரமான முகக்கவசங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார் 


 கொரோனா நோய்த்தொற்றுக்கு  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது நம்பிக்கையளிப்பதாகவும் இருப்பினும் சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகள் மற்றும்  மூச்சு பயிற்சி போன்ற யோகாசனங்கள் நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு   சிறந்த முறையில் குணமளித்து  வருகிறது என்றும் அமைச்சர் உதயகுமார் கூறினார்,