தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது,
மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 43 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது., இதுவரை 15 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது, மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 328 பேர் இன்று நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 66 பேர் பலியாகி உள்ளனர், சென்னையில் மட்டும் இன்று 24 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர், இதுவரை தமிழகத்தில் 2 ஆயிரத்து 32 பேர் இறந்துள்ளனர், இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இதுவரை ஆயிரத்து 277 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, ,