பிளஸ் 2 மதிப்பெண்ணில் மாணவர் சேர்க்கை

நாடு முழுவதும் தற்போதுள்ள சூழ்நிலையில் நீட் தேர்வு நடத்துவது கடினம் என்பதால் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார், 


இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட விரிவான அறிக்கையில் தமிழகத்தில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்படும் மாணவர் சேர்க்கையிடங்களுக்கு  இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியும் பதிலளிக்கவில்லை என்றும் அது தொடர்பாக மாநில அரசு உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது என்றும் அந்த வழக்குகள் இன்று நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார், 


மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில்  போன்றவற்றின் சேர்க்கையில்  இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு   கிரிமிலேயர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர்   இதில் பெற்றோர்களின் ஆண்டுவருமான உச்சவரம்பு ரூ 8 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும்  ஆனால் விவசாயம் மற்றும் பெற்றோரின் ஊதியம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்றும் எதிர்காலத்தில் அந்த நிலை மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார், தமிழகத்தை பொறுத்தவரை சமூகம் கல்வி அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்றும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது  சமூக நீதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கருதப்படுவதாக  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சேர்க்கையில்  \  விவசாயம் மற்றும் ஊதியம் ஆகியவற்றை அடிப்படையாக கொள்ளாமல்   தற்போதுள்ள நடைமுறையே தொடரவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்,