ஸ்டாலின் அட்வைஸ்

உடல் நலனில் அக்கறை செலுததுங்கள்  என்று திமுகவினருக்கு    மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் 
 மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கே.பி.பி.சாமி, குடியாத்தம் காத்தவராயன் ஆகியோர் உருவப்படங்களை  காணொளி மூலம் திறந்து வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில் கே.பி.பி.சாமியின்  உடல் தாங்கிய ஊர்வலத்தில் நடந்து போன நான், அங்கிருந்து குடியாத்தம் சென்று காத்தவராயன் உடல் தாங்கிய ஊர்வலத்திலும் கலந்து கொண்டேன்அந்த வேதனைஇன்னும் என்னை விட்டு மறையவில்லை.இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்கள்.கே.பி.பி. சாமிக்கு  58 வயது தான். இன்னும் பல ஆண்டுகள் இருந்து பணியாற்றி இருக்க வேண்டியவரை இழந்துள்ளோம்.எனவே அனைவருக்கும் நான் சொல்வது உடல்நலத்தைப் பேணிக் கொள்ளுங்கள். அதுதான் மிகமிக முக்கியம்.


சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் கழகப் பணியும் ஆற்ற முடியும்; மக்கள் சேவையும் ஆற்றமுடியும்அதைவிட முக்கியமாக, உங்கள் குடும்பக் கடமைகள் இருக்கின்றன. இந்த மூன்றுக்காகவும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். கவனமாக இருங்கள்.கொரோனாவுக்கு நாம் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் மாவீரன் ஜெ.அன்பழகனை  இழந்துள்ளோம். மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள், சிலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


எனவே மூத்த உறுப்பினர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.வேறு உடல்நலக் கோளாறு உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும்."கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு" ஆகிய மூன்றையும் வலியுறுத்தினார் பேரறிஞர் அண்ணா அதேபோல், "உடல்நலம் - கழகப் பணி - மக்கள் சேவை" ஆகிய மூன்றையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்,