ரஜினியை காமெடியன் ஆக்கிய நிஜ ஹீரோ

ரஜினிகாந்த்தை  தில்லுமுல்லு திரைப்படத்தில் கலகலப்பான காமெடியன் ஆக்கிய நிஜ ஹூரோ கே.பி.சார் இதே நாளில் தான் பிறந்தார், 1930 ஆம் ஆண்டு ஜூலை 9 ம்தேதி அவர் பிறந்தநாள், அபூர்வ ராகங்கள் படத்தில் தான் அந்த அபூர்வநடிகர் ரஜினிகாந்த்தை டைரக்டர் கே.பி. அடையாளம் காட்டினார்,  அந்த படத்தின் ஹூரோ கமல்ஹாசன், தேசிய நடிகர் விருது, அபூர்வராகங்கள் தேசிய அளவில் சிறந்த படத்திற்கான விருதை தட்டி சென்றது, இயக்குநர் சிகரம் என்ற திரையுலகினராலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட கே.பி. இருபெரும் துருவங்களான ரஜினிகாந்த்தையும்  கமல்ஹாசனையும் இணைத்து  வைத்து மாபெரும் வெற்றிக்கொடி நாட்டிய திரைப்படம் நினைத்தாலே இனிக்கும், 


பாலசந்தர் சார் பிறந்தது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில்: பின்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து முத்துபேட்டை  பள்ளியொன்றில்  ஆசிரியராக சென்னை தேனாம்பேட்டை ஏஜி அலுவலகத்தில் பணியாற்றி, நாடகங்கள் மூலம் பிரபலமானார், அவர் இயற்றிய நீர்க்குமிழி என்ற நாடகம் திரைப்படமானது,  அந்த திரைப்படமே ஒரே ஒரு செட்டுக்குள் தான் எடுக்கப்பட்டது, நடிகர் நாகேஷ்க்கு பெரும் புகழை வாரி வழங்கியது அந்த திரைப்படம்,  , அவள் ஒரு தொடர்கதை மனதில் உறுதி வேண்டும் என்று பல திரைப்படங்கள் கமர்சியலாக சக்ஸஸ் ஆக காரணம் , அவையெல்லாம் பெண்மையை போற்றிய படங்கள் என்பது தான் அந்தளவுக்கு லேடீஸ் செண்டிமெண்ட்டை ஒவ்வொரு படத்திலும் கே.பி.சரியாக கையாண்டிருந்தார் என்பது தான் அவரது வெற்றிக்கு காரணமாக  அமைந்தது, நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, நாகேஷ்சுஜாதா, சிரஞ்சிவி சரிதா நாசர் பிரகாஷ் ராஜ் என்று கே.பி.சாரின் பாசறையில் தான் உருவான நட்சத்திர பட்டாளங்கள் ஏராளம் . ்அதே போல் கவிதாலயா என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நட்சத்திரங்களையும் பாலசந்தர் அறிமுகப்படுத்தினார்  ரமேஷ் அரவிந்த் என்ற மிகச்சிறந்த நடிகர், கவிதாலயாவில் இருந்து உருவானவர் தான்,  எம்ஜிஆருக்கும் கே.பி.சாருக்கும் கூட தொடர்பு உண்டு  எம்ஜிஆரின் தெய்வத்தாய் படத்திற்கு 1965 ஆம் ஆண்டு வசனம் எழுதி அதன் வெற்றிக்கு வித்திட்டத்தில்  கே.பாலச்சந்தருக்கும் பங்குண்டு . தமிழ் திரைப்படஉலகில் நுாறுக்கும் மேற்பட்ட பாடங்களை தந்து பாடங்களை புகட்டிய  . கே.பி.2014 ஆண்டு டிசம்பர் மாதத்தில்  தன்னுடைய இயக்கத்தை நிறுத்திக்கொண்டார், அவர் இருந்தாலும் இறந்தாலும் அவருடைய படங்கள் மக்கள் மத்தியில் இன்றைக்கும் பேசிக்கொண்டிருக்கின்றன,