ஒரே நாளில் 171 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து தமிழகம் சாதனை படைத்துள்ளது, கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக , கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..இந்த ஊரடங்குக்கு இடையே சென்னை, மதுரை செங்கல்பட்டு, , காஞ்சிபுரம் மற்றும் , திருவள்ளூர் மாவட்டங்கள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது, இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சனி்க்கிழமையே குடிமகன்கள் உஷாரானார்கள், மதுக்கடைகளுக்கு படையெடுத்து சென்று அவசரமாக பாட்டீல்களை அள்ளி வந்தனர், இதன் காரணமாக மாநிலமெங்கும் சனிக்கிழமையன்று ஒரே நாளில் 171 கோடிக்கு மது விற்பனையில் டாஸ்மாக் சாதனை படைத்திருக்கிறது, இதில் அதிகபட்ச விற்பனை எங்கு தெரியுமா சங்கம் வளர்த்த மதுரைமண்டலத்தில் 41கோடியை எட்டியிருக்கிறது, மாநிலத்தில் அரசியல் திருப்புமுனைகளை ஏற்படுத்தும் திருச்சியில் 39 கோடி ரூபாய்க்கும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 20 ரூபாய்க்கும் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளதிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இன்னும் மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கு இருப்பதையும் மதுபிரியர்கள் தங்களது நினைவில் வைத்திருக்கின்றனர்,
மதுவிற்பனையில் சாதனை