அரசியல் நெடி கலந்த கதை வசனங்களில் அதிரடி படைக்கு தனியான இடம் உண்டு, இந்த படத்தில் சத்யராஜின் அமாவாசை கேரக்டர் மறக்க முடியாதது, பல அரசியல் தலைவர்களை ஒப்பிட்டு பேசப்படும் பாத்திரத்தின் மூலம் சத்யராஜ் தமிழ்ச்சினிமாவில் தனி முத்திரை பதித்தார், அதே வரிசையில் துக்ளக் தர்பாரும் இடம் பெறும் என்கிறார்கள் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார், கோப்ரா, காத்துவாக்குல ரெண்டு காதல் சீயான் 60 உள்ளிட்ட படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார், அதே பட்டியலில் துக்ளக் தர்பாரும் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது, டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் துக்ளக் தர்பாரில் விஜய் சேதுபதியுடன் பார்த்தீபனும் கலக்குகிறார். இப்போது 50 சதவீதம் சூட்டிங் எல்லாம் முடிஞ்சாச்சு மீதி கொரோனோ முடிந்ததும் அரசியல் காரத்துடன் இந்த மசாலா படம் முழுமை பெற்று விடும் என்கிறார்கள், படக்குழுவினர், இதற்காக விஜய்சேதுபதியின் ரசிகர்கள் கொரோனா எப்போது முடியும் துக்ளக் தர்பார் எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்
விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்