சசிகலா இல்லாத அதிமுக

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலையானதும் அதிமுகவே அவர் வசமாகி விடும் பாருங்கள் என்று அக்கட்சியை ஒரு கும்பல்  கதிகலக்கிக்கொண்டிருக்கிறது, அமைச்சர்களிலும் சசிகலா வந்தால் வரவேற்பவர்கள் அதிகமிருக்கிறார்கள் என்று பரவலாக கருத்துக்கள் நிலவி வருகின்றன, இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவில் ஒரு சிலரை தவிர யார் வேண்டுமானாலும்  இணையலாம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார், அவர் மேலும் கூறுகையில் சசிகலா இல்லாத கட்சியும் ஆட்சியும் தான் ஒரே முடிவு: அந்த முடிவு தான் நேற்று இன்று நாளை எப்போதும் என்று அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான ஜெயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்,  சசிகலா விடுதலையானால் நாளை என்ன  நிலை என்று மற்றொரு அமைச்சர் ஒ.எஸ்.மணியனிடம்  எழுப்பப்பட்ட கேள்விக்கு நான் சாதாரண மாவட்ட செயலாளர் தான்.  இந்த கேள்வியை கட்சித்தலைமையிடம் கேட்பதே சரியானது என்று அவர் பதிலளித்துள்ளார்,  இது குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டபோது , அது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்  அதுபற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்,