தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது, சாத்தான் குளத்தில் தந்தை மகன் அடித்து கொல்லப்பட்டதாக அதிரடி சாட்சியம் அளித்த காவலர் ரேவதிக்கு வழங்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன,
ஆண்டுதோறும் சுதநதிர தினவிழா கொண்டாட்டங்களின் போது பல்வேறு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம் அதில் பெண்களின் வீர தீர செயல்களுக்கான விருதாக கல்பனா சாவ்லா பெயரிலான விருதும் வழங்கப்படும், இந்த விருதை பெறும் வீர பெண்மணி யார் என்பது குறித்து விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விருது , சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் தான் அவர்களை அடித்து சித்ரவதை செய்ததாக அதிரடி சாட்சியம் வழங்கிய காவலர் ரேவதிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழத்தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ம்தேதி தமிழக அரசு சார்பில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் சென்னை கோட்டை கொத்தளத்திற்கு எதிரே எளிய முறையில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது,