வரும் ஆகஸ்ட் 1 ம்தேதி முதல் ஊரடங்கு நீடிக்குமா அல்லது தளர்வு குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்பது இன்று தெரியும்
தமிழகத்தில் கொரோனா பீதியால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஜூலை 31 ம்தேதி ஆறாவது கட்டத்தை தாண்டி தொடர்ந்து நீடிக்கிறது ஜூலை 31 ம்தேதிக்குள் ஊரடங்கு முடிய வேண்டும் என்று தமிழக மக்கள் கோவிலுக்கு கூட போகமுடியாமல் பிரார்த்தனை செய்து வருகின்றனர், இந்த நிலையில் திரையரங்கங்களை திறக்க மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது,இதைத்தொடர்ந்து திரைப்பட வர்த்தக சபையினர் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து திரையரங்கங்களை திறக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர், அதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, முதலமைச்சரின் கனிவான பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று மறுமொழி பகர்ந்துள்ளார்
இந்த நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் ஆலோசனை கூட்டம், இன்று காலை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மாவட்டந்தோறும் உள்ள கொரோனா நோய்த்தொற்று நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் விரிவான ஆய்வு நடத்துகிறார், இந்த ஆய்வின் நிறைவுரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தமிழக மக்கள் பேருந்துகளின் ஓட்டத்தையும் திருக்கோவில்களின் திறப்பையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், கர்நாடக பாணியில் முக்கிய முடிவை எதிர்பார்க்காவிட்டாலும் மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கும் வகையில் முடிவு வெளியாகும் என்று பொதுமக்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்,