உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி

தமிழ்நாட்டில்  ஆகஸ்ட் 31 ம்தேதிவரை ஊரடங்கு தொடரும் என்றும்  கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டாலும் ஆன்லைன் கல்வி ஊக்குவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி  கே.  பழனிசாமி  அறிவித்துள்ளார், மேலும்  உணவகங்கள், தேநீர் கடைகளில்  50 விழுக்காட்டினர் அமர்ந்து சாப்பிடவும் அனுமதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார் 
இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே,பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: 
*தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே
நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும்,31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்புசெய்யப்படுகிறது. 
*\, ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்துஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு  எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்குஅமல்படுத்தப்படும்  


*உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில்,50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்துகாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த
அனுமதிக்கப்படுகிறது,  
*காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை   கூடுதலாக ஒரு மணிநேரம்  இயங்க  
அனுமதிக்கப்படுகிறது\
*குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில்ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்துஅமலில் இருக்கும். 


*பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி
பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொது மக்கள்தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
*
தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி, மத்திய அரசின்
வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல்போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.

மாவட்டம் விட்டு மாவட்டம் உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம்செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும்போதும்  , வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும்
போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சென்னைமாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி இ பாஸ் பெற வேண்டும்  


*வணிக வளாகங்கள்பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள்
மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.ஆகஸ்ட் மாதம் முழுக்க மூடப்படும் 

* உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதியில்லை. ரயில் பேருந்து போக்குவரத்து இயக்கப்படாது: சர்வதேச விமான போக்குவரத்துக்கும் தடை வந்தே பாரத் வெளிநாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் விமானங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றுநோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
கணிசமாக உள்ள நிலையில் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது என்றும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் போன்ற உடற்பயிற்சிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது, அந்த  தளர்வுகள் எதுவும் முதலமைச்சரின் அறிவிப்பில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது