.வருகிறது ஹவாலா

பத்து இணையதளங்களில் வருகிறது ஹவாலா 
 |நண்பர்கள் இருவர் நிழல் உலக தாதாக்களாக மாற அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள் இருவரும் கடுமையாக அடிதடி மற்றும் துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதேசமயம் இருவருக்கும் அழகான காதலிகளும் உண்டு.  அவர்கள் தாதாக்கள் ஆனார்களா  காதலர்களாக வாழ்ந்தார்களா?என்பதை முழுநீள ஆக்சனுடன் விடை தாங்கி வரும் படம்தான்  "ஹவாலா". இதில் சீனிவாஸ் கதாநாயகனாகவும் அமித்ராவ் இன்னொரு கதாநாயகனாகவும் நடிக்க , அமுல்யா சஹானா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். .. நிழல் உலகத்தில் நடைபெறும் சம்பவங்களை விறுவிறுப்பான கதையாக்கி பரபரப்பான திரைக்கதை அமைத்து அமித் ராவ் இயக்கியுள்ளார். சூரியகாந்தி ஒளிப்பதிவையும், சிவராஜ் மேகு படத்தொகுப்பையும், கிஷோர் எக்ஸா பாடல் எழுதி இசையையும், குன்றத்தூர் பாபு சண்டை பயிற்சியும், பாலாஅகுள் நடனப் பயிற்சியையும், எஸ்பி.செல்வம்- அம்மித் ஆர். கே. இருவரும் வசனத்தையும், ரஞ்சித் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர். வரும் 31 ம்தேதி  முதல் "ஹவாலா" திரைப்படம்  பத்து இணையதளங்களில்  ஹவாலா வெளியாகிறது  அவை 
HUNGAMAPLAY, MC PLAYER , VODAFONE PLAY, AIRTEL XTREAM , IDEA MOVIES
AMAZON FIRE TV, MI TV, TATA SKY BINGE , V4 STREAM, CARU ORIGINALS
(OTT யில்) உலகெங்கும் வெளிவருகிறது.