யோகா, ஜிம்னாடிக்ஸ்க்கு தடையில்லை.

,கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த  பிறப்பிக்கப்பட்ட  ஊரடங்கு உத்தரவு வரும் ஆகஸ்ட் 31 ம்தேதி வரை தொடரும் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது 
நோய்க்கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் முதல்  இரவு நேரங்களில் தனிநபர்கள் நடமாட விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  யோகா பயிற்சி நிறுவனங்கள் ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி கூடங்களுக்கு  ஆகஸ்ட் 5 ம்தேதி திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது 
,ஆனால் மக்கள் நல்வாழவு துறை அமைச்சகம் வெளியிட்ட  நெறிமுறைகளின் படி  கொரோனா நோய் பரவல் ஏற்படாதவகையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ,வரும் ஆகஸ்ட் 15 ம்தேதி சுதந்திர தினவிழாவை  சமூக இடைவெளியுடன் சுகாதாரத்துறை விதிமுறைகளை பின்பற்றி கொண்டாட அனுமதிக்கப்படுகிறது.  உள்துறை அமைச்சரகத்தின்  விதிமுறைகளின் படியும்  முகக்கவசங்கள் அணிந்தும் விழாவை கொண்டாடப்பட வேண்டும்,என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது 
கல்லுாரிகள் பள்ளிகள் வரும்  ஆகஸ்ட் 31 ம்தேதி வரை மூடப்படும் என்றும் ,மெட்ரோ ரயில்கள் சினிமா தியேட்டர்கள் நீச்சல் குளங்கள்  பொழுதுபோக்கு பூங்காக்கள் மால்கள் , மதுபான பார்கள் ,பொது கூடல்களுக்கு அனுமதியில்லை. என்று குறிப்பிடப்பட்டுள்ளது 
 அரசியல், சமூக விளையாட்டு கல்வி கலாசார மத நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது