செமஸ்டர் ரத்து : மாணவர்கள் வரவேற்பு


அனைத்து கல்லுாரிகளுக்கான இந்த  ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புக்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் 
தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லுாரிகள் பொறியியல் கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளின் இந்த ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்த இயலாதநிலை இருப்பதாக முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி  மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியலுக்கு  கடிதம் மூலம் தெரிவித்திருந்தார், இது தொடர்பாக  தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில்  ஒரு நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டிருந்தது, அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில்  முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை அறிவியல் கல்லுாரி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகள் மற்றும்  பொறியியல் கல்லுாரிகளில்  முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் முதுநிலை படிப்பில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் இந்த ஆண்டுக்கான இந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என்றும் அந்த மாணவர்கள் அடுத்த கல்வியாண்டு செல்ல அனுமதி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார், மேலும்  மாணவர்களின் நலன் கருதி  பல்கலைக்கழக மானியக்குழு மற்றும்  அகில இந்திய தொழில்நுட்பக்குழு வழிகாட்டுதல் படி இந்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் 
செமஸ்டர் தேர்விலிருந்து  விலக்களிக்கும் இந்த முடிவை தமிழகம் முழுவதும் மாணவர்கள் பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர், மாணவர்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்,