மாணவர்களை வென்ற மாணவியர்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியர்களே 5.39 சதவீதம் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்,


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9-30 மணியளவில் திடீரென்று வெளியிடப்பட்டது, தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது குறித்து இன்று தான் அரசு செய்திக்குறிப்பே வெளியிடப்பட்டது, வழக்கம் போல் அரசு தேர்வுத்துறை தான் இதற்கான அறிவிப்பை வெளியிடும் இந்த ஆண்டு முதன்முதலாக தமிழக அரசு நேரடியாக செய்திக்குறிப்பு வெளியானது, அதுவும் கூட ஒன்றரை மணிநேரத்திற்கு முன்பு தான் தேர்வு முடிவு குறித்த அறிவிப்பே வெளியானது


கடந்த மார்ச் 2ம்தேதி முதல் 24 ம்தேதி வரை நடைபெற்ற, இந்த தேர்வை எழுத   7 லட்சத்து 99 ஆயிரத்து 717  மாணவர்கள் பதிவு செய்திருந்தனர், தேர்வெழுதிய பள்ளி  எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்து 646 பேர், பள்ளி மாணவியரின் எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்து 285 பேர் , பொதுப்பாடப்பிரிவில் 7 லட்சத்து 28 ஆயிரத்து 516 மாணவர்களும்  தொழிற்பாடப்பிரிவில் 51 ஆயிரத்து 415 மாணவர்களும் தேர்வெழுதினர்  
இந்த தேர்வில் 92 .3 சதவீத மாணவர்கள்  தேர்ச்சி பெற்றுள்ளனர், இதில் 94.80 சதவீதம் பேர் மாணவியர், 89.41 சதவீதம் பேர் மாணவர்கள் . வழக்கம் போல் மாணவர்களை விட மாணவியரே 5.39 சதவீதம் அதிக தேர்ச்சியடைந்துள்ளனர், ,