செ்ன்னைக்கு புதிய கமிஷனர்

சென்னை  மாநகர புதிய போலீஸ் கமிஷனராக  மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார், செயலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த அகர்வால்   தேனி.துாத்துக்குடி மாவட்டங்களின் எஸ்பியாகவும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனராகவும்  சென்னை பூக்கடை போலீஸ் துணைக்கமிஷனராகவும் சென்னை தெற்கு போக்குவரத்துக்காவல்துறையின் துணைக்கமிஷனராகவும்  பதவி வகித்துள்ளார்


பஞ்சாபை சேர்ந்த மகேஷ்குமார், 22 வயதிலேயே  ஐபிஎஸ் அதிகாரியாகி சாதனை படைத்தவர்,  சவாலான சென்னை மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ்குமார் நாளை பதவி ஏற்கிறார், , தற்போதைய கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 15ம்தேதி பதவியேற்றார், மூன்றாண்டுகள் கடந்த கமிஷனராக பதவி வகித்த விஸ்வநாதன், சாமானிய மக்களுடன் கலந்து பேசி சட்டம் ஒழுங்கு பிர்சனைகளில் மட்டுமல்லாமல் ,கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக  சமுதாயரீதியாகவும் காவல்துறையினரின்  கடமையை விரிவுப்படுத்தி சேவையாற்றினார்,அதே போன்ற சவால்கள் காவல்துறையினருக்கு இன்னமும் காத்திருக்கின்றன,மகேஷ்குமார் அகர்வாலின் தலைமையில் சென்னை காவல்துறையினர் திறம்படசமாளிப்பார்கள் என்று எதிப்பார்ப்போம்,  ,    


மதுரைக்கு புதிய கமிஷனராக பிரேம் ஆனந்த் சின்காவும் திருச்சி மாநகர கமிஷனராக லோகநாதனும் திருப்பூர் மாநகர கமிஷனராக கார்த்திகேயனும் விழுப்புரம் எஸ்.பி.ஆக ராதாகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்,