திமுக கறுப்புக்கொடி போராட்டம்

\ கொரோனா கால  மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வீடுகள் தோறும் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் \அறிவித்துள்ளார் 


திமுக மாவட்ட செயலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றH உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று  திமுக    தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது, காணொளி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில்  முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அந்த தீர்மானத்தில்  கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் யாருக்கும் வேலையும் இல்லை; சம்பளமும் இல்லை; தொழிலும் இல்லை; வருமானமும் இல்லை.என்றும்  மின்சாரச் சட்டத்திலேயே “நுகர்வோருக்கு நியாயமான மின்கட்டணத்தை வழங்குவது மிக முக்கியம்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில் 


மத்திய பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களே கொரோனா கால மின்கட்டணச்  சலுகைகளை அறிவித்துள்ள நிலையில்,  ஊரடங்கு கால மின்கட்டணத்தை  குறைக்கக் கோரியும்  குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை எளிய மாதத் தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்க கோரியும் வரும்  21 ம்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராடுவது என்று அந்த கூட்டத்தில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,