கெளதமி, நமீதாவுக்கு பாஜகவில் பதவி

திமுகவில் இருந்து அதன் துணை பொதுசெயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, அண்மையில் பாஜகவுக்கு தாவினார், அவருக்கு மத்திய அரசின் பதவி கிடைக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டது, இப்போது அவருக்கு பாஜகவின் மாநிலத்துணைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது, அதே போல் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவிய முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு  துணைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது, 


கோவையை சேர்ந்த  தொலைக்காட்சி விவாத நட்சத்திரம்  வானதி சீனிவாசனுக்கும் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது, கே.டி.ராகவன் கரு,நாகராஜன் ஆகியோர் மாநில பொது செயலாளர்களாகவும்  மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகைகள் கெளதமி, குட்டி பத்மினி மற்றும் நமீதா ஆகியோருக்கு  பதவிகள் வழங்கப்பட்டுள்ளன,