ரயில் கட்டணம் எக்குதப்பாய் ஏறும்

ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்த்தால் ரயில் எக்குதப்பாக எகிறும்  என்று ரயில்வே தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது, ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தட்சிண ரயில்வே தொழிற்சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர், இந்த ஆர்ப்பாடத்திற்கு ரயில்வே காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை, எனினும் சமூக இடைவெளியோடு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர், நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை  டி.ஆர்.இ.யூ என்றழைக்கப்படும் ரயில்வே தொழிற்சங்கத்தின்  செயல்தலைவர் ஜானகிராமன் தொடங்கி வைத்து பேசுகையில், ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை மூலம்   அடுத்த 35 ஆண்டுகளுக்கு ரயில் கட்டணம் பெட்ரோல் டீசல் போல விலை போல தாறுமாறாக உயரும், எண்ணெய் நிறுவனங்கள் போல தனியார் நிறுவனங்கள் ரயில் கட்டணத்தை உயர்த்தி கொண்டே போகும், ரயில்கள் குளிர்சாதன வசதிகள்  செய்யப்பட்டாலும்  ரயில் பயணம் என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மாறும் என்று தெரிவித்தார், தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது ஆம்னி பேருந்துகள் போல கடுமையான கட்டண உயர்வை பயணிகள் சந்திக்க வேண்டியிருக்கும்  வழித்தடங்களை தனியாருக்கு வழி ஒப்படைக்கும் நிலையில் பாதுகாப்பான பயணம் கேள்விக்குறியாகும் என்று ஜானகிராமன் எச்சரித்தார்,