திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் வரும் 27 ம்தேதி திங்கட்கிழமை காலை 10-30 மணிக்கு நடைபெறுகிறது
இதற்கான அறிவிப்பை திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது, அதில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 27 ம்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும், காணொளி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரோனா கால மோசடிகள் குறித்தும் நிர்வாக தோல்விகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த கூட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை பங்கேற்கும் என்றும் முடிவில் போராட்டம் நடத்துவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது,