சிலப்பதிகாரம் பெரியார் சிந்தனைகள் ஆகிய பாடங்களை மீண்டும் சேர்க்காவிட்டால் பாஜ தமிழ் மண்ணில் நோட்டாவை தாண்டுவதை கூட மறந்து விடலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் பதிவிட்ட கருத்து வருமாறு: ராணுவ உடையில் திருக்குறளை மேற்கோள் காட்டும் பிரதமர் ,சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து ராணுவத்தில் தமிழர்கள் பங்கு என்ற பாடத்தை நீக்குகிறார் வெறும் பேச்சு மட்டும் தானா தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி.,யின் எல்லைப் போராட்டம் ஆகிய பாடங்களை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க மறுத்தால் தமிழ் மண்ணில் நோட்டாவைத் தாண்டுவதைக் கூட பா.ஜ.க. மறந்துவிடலாம் என்று பதிவிட்டுள்ளார்,