நடிகை விந்தியாவுக்கு அதிமுகவில் பதவி

நடிகை விந்தியாவுக்கு அதிமுகவில் துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது, 


அதிமுகவில் மாவட்ட செயலாளர்களை அதிரடியாக மாற்றம் செய்து   அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளனர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரண்டு தொகுதிகள்,மற்றும் மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற முறையில் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், மதுரவாயில் மற்றும் பூந்தமல்லி தொகுதிகளை உள்ளடக்கிய திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு ஊரகத்தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்,நத்தம் , ஆத்தூர், பழனி, மற்றும் நிலக்கோட்டை சட்டமன்றத்தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மாவட்ட செயலாளராகியுள்ளார், திண்டுக்கல் ஒட்டன் சத்திரம் மற்றும் வேடசந்தூர் தொகுதிகள் அடங்கிய திண்டுக்கல் மேற்கு தொகுதிக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார், 


திமுகவில் இருந்து மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய கருப்பசாமி பாண்டியன், அ.ம.மு.கவில் இருந்து ஆர்ப்பாட்டத்தோடு வந்த முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா உள்ளிட்டோருக்கு அமைப்பு செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜனுக்கு  கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது, நடிகை விந்தியாவுக்கும் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது,