மருத்துவப்படிப்பில் இட ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு தொடர்ந்த அதிமுகவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்
“மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு” அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உரிமை உண்டு” என்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, அமர்வு அளித்த தீர்ப்பிற்கு அதிமுக - திமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு இது , இதை மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது என்று நம்புவதாக அதிமுக அமைப்பு செயலாளரும் அமைச்சருமான ஜெயகுமார் தெரிவித்துள்ளார், இந்த தீர்ப்பை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் , முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் அதிமுக பணியாற்றுவதை பறைசாற்றுவதாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்
இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கில் , இந்திய மருத்துவக் கழகத்தை விட்டு, “மத்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட வைத்த மத்திய பா.ஜ.க.அரசு - “பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டி விடும்” வேலையைப் பார்த்ததாக குற்றம்சாட்டியுள்ளார் .ஆனால் திமுக வழக்கறிஞர்கள் - மத்திய அரசின் இடஒதுக்கீட்டு அநீதியை, சென்னை உயர்நீதிமன்றம் முன்பு மிகத் தெளிவாகவும் - ஆணித்தரமாகவும் எடுத்துரைத்து வாதிட்டதால், இன்றைக்கு, “மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உண்டு; என்றும் ” என்று தீர்ப்பளித்துள்ளது, 73 ஆண்டுகள் கழித்து வந்துள்ள சமூகநீதிக்கான சங்கநாதமாக ]அமைந்துள்ள .இந்தத் தீர்ப்பைப் பெறுவதில் ஒட்டுமொத்தத் தமிழகமே ஓரணியில் நிற்பதன் அடையாளமாக - ஒருமித்த கருத்துடன் தோளோடு தோள் நின்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் - வாதிடும் வகையில் - வழக்குத் தொடுத்த அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும், உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்ததற்கு மு.க.ஸ்டாலின் தனது நன்றியை தெரிவித்துள்ளார்,