எம்ஜிஆரின் ஆவேசம்,


;சென்னை  வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லுாரியில்  கொரோனா நோய்த்தடுப்பு  நடவடிக்கையாக சித்த மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது, இந்த நோய்த்தொற்றில் இருந்து பூரண குணமடைந்த 8 பேரை வழியனுப்பும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கொரோனா நோயில்  இருந்து குணமடைந்த அகத்தியன் என்பவர் பேசிய  பலரது புருவங்களை உயர்த்த வைத்தது 


அகத்தியன் என்கிற நான் 15 புத்தகங்களை எழுதிய எழுத்தாளன், நம்முடைய பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தால் இந்த நோயில் இருந்து மீண்டு வந்திருக்கிறேன், என்று கூறிய அவர், அலோபதி மருத்துவர்களுக்கு இணையாக சித்த மருத்துவர்களுக்கும் எம்.ஜி.ஆர் ஊதியத்தை உயர்த்தியதை  சுட்டிக்காட்டினார், அப்போது அலோபதி மருத்துவர்கள் எங்களுக்கு  இணையாக சித்த மருத்துவர்களுக்கும் ஊதியமா என்று கேட்டார், அதற்கு  எம்ஜிஆர்  என்னுடைய இந்த உடம்பு சித்த மருத்துவத்தால் ஆனது, நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டுமா கேளுங்கள்: மற்றவர்கள் பற்றி கேட்காதீர்கள் என்று ஆவேசமாக பதிலளித்ததை நினைவு கூர்ந்தார்,


சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த சுரேஷ் கண்ணன் என்பவர்.இங்கு நான் வந்தபோது தவறான இடத்திற்கு வந்து விட்டோமே என்று கூட நினைத்தேன், எனக்கு காய்ச்சல் மூன்று நாட்களாகி விட்டது இங்கே வந்தும் தீரவில்லை. அதனால் அந்த எண்ணம் எனக்கு ஏற்பட்டது, ஆனால் இப்போது  என்னுடைய வயது 52 என்று தெரியவில்லை. 32 ஆக குறைந்து விட்டது, அந்தளவுக்கு சித்த மருத்துவர்கள் எனக்கு இளமையையும் ஆரோக்கியத்தையும் வழங்கியுள்ளனர், சித்த மருத்துவ மையத்தில் பயனடைந்த அனைவரையும் வழியனுப்பி வைத்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ,  சித்த மருத்துவத்தின் கபசுர நீரை அலோபதி மருத்துவர்களும் விரும்புகிறார்கள்,  சித்த மருத்துவத்தின் மூலம் நோய்த்தொற்று உடையவர்கள் குணமடைந்து வருகிறார்கள், அதனால் பலர் சித்த மருத்துவத்தை விரும்பி வருகிறார்கள், இப்போது மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, சித்த மருத்துவத்திற்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது,  என்றார்,