நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா , என்,ஆர். இளங்கோ ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன,
கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடத்தை தவிர 38 தொகுதிகளிலும் திமுக மகத்தான வெற்றி பெற்றது,இதில் தேனி தொகுதியில் மட்டும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றி பெற்றார், அவர் இப்போது நாடாளுமன்ற அதிமுக குழுத்தலைவராக பணியாற்றி வருகிறார், இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கே.பி.முனுசாமி முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, தாமக தலைவர் வாசன் ஆகியோர் அண்மையில் பதவியேற்றுக்கொண்டனர் , புதிதாக பதவியேற்ற வாசனுக்கு நாடாளுமன்றத்தின் மனிதவளமேம்பாட்டுத்துறைக்கான நிலைக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது, இதில் கல்வி தொடர்பான முக்கிய முடிவுகளில் வாசன் உள்ளிட்ட நிலைக்குழு உறுப்பினர்கள் விவாதிக்க வாய்ப்பு இருக்கலாம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார், இந்த நிலைக்குழுவில் திமுக எம்.பி. என்.ஆர் இளங்கோவுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது, போக்குவரத்து சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்
நாடாளுமன்ற நிலைக்குழுவில் திமுக
• ராயபுரம் ரவுண்டப்