மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
திமுக இளைஞர் அணியின் மாவட்ட மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி மூலம் இன்று நடைபெற்றது, இந்த கூட்டத்தில் இந்த கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிிறைவேற்றப்பட்டன,அதில் முக்கிய தீர்மானமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது, எத்தனையோ ஊர்களில் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் கடைக்கு வருபவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது காட்டுத்தீயாக கொரோனா பரவி உயிர்களை பலி வாங்கி வரும் வேளையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என் என்றும் நோய்பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது