கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இடையே பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு பெரும் வரவேற்பு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்,
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியொன்றில், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 12 வகையான மருத்துவமுறைகளில் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் அதில் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு சிறந்த வரவேற்பு இருப்பதாகவும் தெரிவித்தார் தமிழகத்தில் சித்த மருத்துவம் ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்றவற்றிற்கு அரசு பாரபட்சம் பார்ப்பதில்லை, என்றும் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏதுமில்லை என்றும் . சித்த மருத்துவ மருந்துகளும் அரசு நிறுவனமான டாம்ப்கால் மூலம் போதுமான அளவுக்கு வழங்கப்படுகிறது,.நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வந்தால் இறப்பு தவிர்க்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்,