குஷ்பு ஏற்படுத்திய குழப்பம்

புதிய கல்விக்கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்து நடிகை குஷ்பு வெளியிட்ட கருத்தால் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது


புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அண்மையில்  ஒப்புதல் அளித்தது, கொரோனா ஊரடங்கு நேரத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் கொள்கைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்,இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு திடீரென புதிய கல்விக்கொள்கைக்கு  ஆதரவு தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்


புதிய கல்விக்கொள்கையில் காங்கிரஸ் நிலைப்பாட்டில் இருந்து நான் மாறுபடுவேன்.  இதற்காக ராகுல்காந்தியிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ஆனால் அதே நேரத்தில் எதற்கும் தலையாட்டுகிற ரோபாட் ஆகவும் கைப்பாவையாகவும் இருக்க விரும்பவில்லை,  கட்சித்தலைவர் சம்மதிக்கிற கருத்துக்களுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதில்லை இந்த நாட்டின் குடிமகளாக  எனது குரலை துணிச்சலாகவும் தைரியமாகவும் பேசி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்,ஆனால்  கருத்துவேறுபாடு இருக்கிறது என்பதற்காக ஒரு கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்பது இல்லை. தனிப்பட்ட கருத்து என்பது கட்சிக்கு சம்பந்தப்பட்டது அல்ல: ஆகவே காங்கிரசில் நான் நீடிக்கிறேன்,என்று அவர் குறிப்பிட்டுள்ளார்,


இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியும் டுவிட்டர் மூலமே  பதிலளித்துள்ளார்  அதில்  , காங்கிரசில் கருத்து சுதந்திரம் உண்டு, கட்சியின் அமைப்புக்குள் பேசினால்  அதற்கு வரவேற்பு உண்டு, ஆனால் எந்தவொரு மாறுபட்ட கருத்தை கூறுவதாக இருந்தாலும்  அதை கட்சிக்குள் தான் தெரிவிக்க வேண்டும்,  வெளியில் போய் பேசினால் முதிர்ச்சியின்மை என்று கண்டனம் தெரிவித்துள்ளார், காங்கிரஸ் கட்சியின்  தேசிய செய்தி தொடர்பாளராக இருந்து வரும் நடிகை குஷ்பு பாஜகவின் கல்விக்கொள்கைக்கு  ஆதரவாக வெளியிட்டிருக்கும் பதிவுக்கு தேசிய அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது, ஏற்கனவே சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட குஷ்பு காங்கிரசில் நீடிப்பாரா என்பது ஒரிரு நாட்களில் தெரிந்து விடும்.,