தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை கூட இருக்கிறது, இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதிர்ப்பார்த்து பல்வேறு தரப்பிலும் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டன, அதில் முக்கியமானது, பேருந்துகள் ஒட்டம் பற்றியதாகும், சென்னையில் நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாலும் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் வரும் 15ம்தேதிக்குள்ஊரடங்கு கிட்டதட்ட முடிவடைந்து விடும் என்று செய்திகள் பரவின, ஆனால் அரசு தரப்பில் அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது,அதாவது வரும் ஜூலை 31 ம்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடரும் என்றும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்கு இயக்கப்படாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது,இதனால் பேருந்து போக்குவரத்தை எதிர்பார்த்த சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்,
பேருந்துகள் ஓடாது