அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அதற்கான வகுப்புகளை வரும் 13 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி துவக்கி வைப்பார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்,
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார், கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களை அவர் சந்திக்கையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன, அதே போல அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதற்கான திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 13 ம்தேதி துவக்கி வைப்பார் என்று அறிவித்துள்ளார்,
அமைச்சர் செங்கோட்டையன் விடுத்த அறிக்கையொன்றில் கடந்த மார்ச் மாதம் 24 ம்தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித்தேர்வை எழுதாத மாணவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த வேண்டுகோளை ஏற்று வரும் 27 ம்தேதி அதற்கான தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார், இதற்கான நுழைவுச்சீட்டுகளை பள்ளிக்கல்வித்துறையின் ( www.dge.tn.gov.in இணையதளத்தில் வரும் 13 மற்றும் 17 தேதிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்,