மக்களின் தாகம் தீர்த்த போலீஸ் அதிகாரி

சென்னையில் குடிநீருக்கு மக்கள் படும் துன்பம் சொல்லி மாளாது, நள்ளிரவிலும் தண்ணீர் லாரி வருமா என்று எங்கு பார்த்தாலும் குடங்களுடன்  பெண்கள்  அணி வகுக்கும்   சென்னையில் அயனாவரத்தில் உதவிஆய்வாளர் கலைச்செல்வி என்பவர், மக்களி்ன் தாகம் தீர்க்க அடி குழாய் அமைத்து தந்தது, சமூக வலைதளங்களில் ட்ரண்ட் ஆகி மாநகர போலீசாருக்கு பெரும் பாராட்டை பெற்று தந்துள்ளது 
      சென்னை அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட அயனாவரத்தில், ஆனந்த விநாயகர் கோவில், இரண்டாவது தெருவில்  மக்கள், குடிநீருக்காக வீதிவீதியாக அலைந்தனர்.அங்கு மக்களுக்கு குடிநீர் கிடைப்பதற்கு அரசியல் கட்சிகள் தடையாக இருந்ததாக கூறப்படுகிறது, இதைத்தொடர்ந்து    இது குறித்து, அயனாவரம் போலீசாரிடம், மக்கள் புகார் அளித்தனர்.. வழக்கை விசாரித்த, அயனாவரம் பெண் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி, குடிநீர் வாரிய பொறியாளரிடம் பேச்சு நடத்தி, அப்பகுதியில், புதிதாக அடிக்குழாய் ஒன்றை, \அமைத்து தந்தார். இதையடுத்து, உதவி ஆய்வாளர் கலைச்செல்விக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர், சமூகத்தின் அடிப்படை பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்பிருக்காது என்று உணரும் கலைச்செல்வி போன்ற காவல்துறையினர் தான் மக்களுக்கு அதிகம் தேவை