ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சென்னை கிண்டி ராஜ்பவன் முன் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அறிவித்துள்ளார்
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் தலைமையிலான பெரும்பான்மை கொண்ட காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு ஆளுநரை பயன்படுத்தி பாரதீய ஜனதா கட்சி முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அகில இந்திய அளவில் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த போவதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது, அதன் ஒரு பகுதியாக சென்னையில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையான கிண்டி ராஜ்பவன் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் எச்.வசந்தகுமார் ,டாக்டர் ஜெயகுமார், விஷ்ணுபிரசாத் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,