தமிழகம் முழுவதும் ஆடிப்பூரம் வெள்ளிக்கிழமை பக்திபரவசத்துடன் கொண்டாடப்பட்டது, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் பெண்கள் பெருமளவில் திரண்டனர், சென்னை திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோவிலில் வடிவுடையம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது, ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில் அம்மன் திருப்பாதத்திலும் மடியிலும் வளையல்களை வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவர், கொரோனா காலம் என்பதால் திருவொற்றியூர் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை மாலை நான்கரை மணி முதல் இந்த நிகழ்வு வடிவுடையம்மன் திருக்கோவில் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த நிகழ்வை கண்டு களித்து வீடுகளிலேயே அம்மனின் அருளை தரிசித்தனர், தங்களது நேர்த்திக்கடனை அம்மன் படங்களில் ஆன்லைன் மூலம் செலுத்தினர்,
ஆன்லைன் மூலம் நேர்த்திக்கடன்