ராக்கெட் வேகத்தில் காய்கறி விலை

திருமழிசை சந்தையால் சென்னையில் காய்கறிகள் ராக்கெட்வேகத்தில் உயர்ந்தவண்ணம் இருக்கிறது, இதனால் கோயம்பேடு மார்க்கெட்டு எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது,


கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம்தேதி முதல்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,  வரும் ஜூலை 31 ம்தேதி வரை ஆறாவது முறையாக  ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு வருகிறது, இதற்கிடையில்  கடந்த ஜூன் 19 ம்தேதி முதல் 5 ம்தேதி வரை சென்னை மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஊரடங்கு சற்று கடுமையாக்கப்பட்டது, தினமும் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை மளிகைக்கடைகள், காய்கறிக்கடைகள் மற்றும் அவசர மருத்துவ தேவைகளாக மருந்துகள் நோயாளிகளுக்கான போக்குவரத்து சேவையே அனுமதிக்கப்பட்டது, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது, 


இந்த நிலையில் நாளை முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடங்க இருக்கிறது, இந்த தளர்வில் ஆட்டோ டாக்சி போன்றவை இயங்கலாம் என்றும் இதுவரை மூடப்பட்டிருந்த   தேநீர்க்கடைகள்  சலுான்கள் அழகு நிலையங்கள், ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கும் அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது,  இந்த நிலையில் பெரிய மால்கள் நட்சத்திர ஒட்டல்களை திறக்க வேண்டும் என்றும்  சிறு கடைகளுக்கு அபராதங்கள் விதிப்பது ,சீல் வைக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார், இதற்கிடையில்  நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள கோயம்பேடு காய்கறி மற்றும் மலர் மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று வியாபாரிகளோடு பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்,  ஏற்கனவே 1960 கடைகளுடன் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் இயங்கி வந்தன, கோயம்பேடு மூடப்பட்டதை திருமழிசை சந்தையில் 200 கடைகளுக்கு தான் அனுமதி வழங்கப்பட்டது, அந்த சந்தையும் மழையில் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதால்  வியாபாரிகள் பெரும் இழப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்,  மேலும்  கோயம்பேட்டை விட திருமழிசை வெகுதூரம் என்பதால் காய்கறி விலைகள் மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளன  ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்ற தக்காளி 60 ரூபாய்க்கு எகிறி  விட்டது, 10 ரூபாய்க்கு விற்ற கீரை வகைகள் இப்போது 20 ரூபாயிலிருந்து 25 ரூபாய் பெரும் மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் சென்னை மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர், சென்னை புளியந்தோப்பில் உள்ள ஆட்டு்க்கறி சந்தையும் மூடப்பட்டுள்ளதால் , அதன் விலையும் கிலோ ஆயிரத்திற்கு உயர்ந்து விட்டது  விலைவாசிகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும், அல்லது  மாநகர மக்களுக்கு பொருட்கள் சுலபமாகவும் மலிவாகவும் கிடைக்கும் வகையில்  மாற்று ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது,