வலைதளங்களில் பக்தி பரவசம்

கோவில்களில் உற்சவங்களை நடத்தி பக்தர்களுக்கு  இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்து  சாமி தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது


தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன, குறிப்பாக இந்து மத கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது, இதனால் மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் உற்சவங்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, மதுரையில் அழகர் கோவில் திருவிழாவும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது,ஆனால் பக்தர்கள் திரளாமல் திருவிழா நடத்தப்பட்டு தமிழக வரலாற்றில் இணையதளம் மூலமாக முதன்முதலாக ஒளிபரப்பப்பட்டது, இதே போல் தமிழகம் முழுவதும் திருக்கோவில்களின் திருவிழாக்கள் மற்றும் உற்சவங்களை வலைதளங்களின் மூலம் பக்தர்கள் நேரில் சென்று தரிசனம் செய்ய முடியாவிட்டாலும் அவர்களின் வீடுகளில் வலைதளங்களில்  நேரடியாக ஒளிபரப்ப அனுமதியளிக்கப்பட்டுள்ளது 


இது குறித்து இந்து அறநிலைய அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளர் பணிந்திர ரெட்டி அனுப்பியுள்ள வழிகாட்டுநெறிமுறைகளில்  கூறியிருப்பதாவது: கொரோனா நோய்த்தொற்று காரணமாக திருக்கோவில்களில் அரசின் விதிமுறைகளின் படி பூஜைகள், தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது,இப்போது வழக்கமாக நடைபெறும் விழாக்கள், உற்சவ நிகழ்வுகள் குறித்து காணொளி பதிவேற்றம் செய்து ஒளிபரப்புவது குறித்து கேள்விகள் வந்தவண்ணமிருக்கின்றன,கோவில்களின் பழக்க வழக்கப்படி நடைபெறும் திருவிழாக்கள் குறித்து தலைமையிடத்தின் அனுமதி பெற தேவையில்லை. தொன்று தொட்டு கடைபிடிக்கப்படும், பழக்கவழக்கங்கள் மாறுதலின்றி குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு முகக்கவசங்கள் அணிந்து 6 அடி  சமூக இடைவெளி கடைபிடித்து நடத்தப்படலாம் . இதில் பக்தர்களுக்கும் உபயதாரர்களுக்கும்  கண்டிப்பாக அனுமதியில்லை. ஆனால் பக்தர்கள் தங்களது இல்லங்களில் இருந்தே காணும் வகையில் வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு நடத்த தடையில்லை என்று அந்த வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 


மேலும் கொரோனா நோயிலிருந்து தற்காத்துக்  கொள்ள அரசால்
வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டி, நெறிமுறைகளையும்,நிச்சயமாக 
கடைபிடிக்கவேண்டும்.திருவிழாக்கள்  தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிஏதும் பெற வேண்டியிருப்பின், அதற்கான அனுமதியையும்  பெற்று வேண்டும்.என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இதன் மூலம் கோவில் திருவிழாக்களை நமது செல்போன்களிலும் கண்டு பக்திபரவசமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது,