அமெரிக்காவில் உள்ள வலைதளங்கள் அந்த நாட்டின் அதிபர் ட்ரம்பை கிண்டல் செய்து பதிவிடுவதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் கூறுகையில் , 59 சீன செயலிகளை நீக்கம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது குறித்து தெளிவான விளக்கம் எதுவும் இல்லை. பொதுவாக உலகம் முழுவதும் உள்ள சமூக வலைதளங்கள் ஆட்சியாளர்களை விமர்சிக்கின்றன, கிண்டல் செய்கின்றன, அமெரிக்காவில் டுவிட்டரும் வாட்ஸ்அப் மூலம் மக்கள் ட்ரம்பை எதி்ர்க்கவும் செய்கின்றனர், அவரை ஆதரிக்கவும் செய்கின்றனர் உலகம் முழுவதும் வலைதளங்கள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையை தான் சீன செயலிகளும் கையாண்டன இதை எல்லை பிரச்னையை மோதல் ஆக்குவதெல்லாம் தவறு, பொதுவாக சமூகவலைதளங்கள் குறித்து மத்திய அரசு புதிய அணுகுமுறையை மேற்காெள்ள வேண்டும், அது குறித்து விரிவான கொள்கையை வகுக்க வேண்டும் அதை மக்கள் மத்தியில் வெளிப்படையான முறையில் விவாதித்துவெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்,அவர் மேலும் கூறுகையில் சீனா கம்யூனிஸ்ட் நாடு என்பதால் அந்த நாட்டு செயலிகளுக்கு ஆதரவாக பேசவில்லை. வியட்நாமும் கூட கம்யூனிஸ்ட் நாடு தான்.ஆனால் அந்த நாட்டுக்கும் சீனாவுக்கும் உறவு சரியில்லை.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி., எள்லை பிரச்னையில் இருந்து பல்வேறு பிரச்னைகளில் சீனாவை எதிர்த்து தான் வந்திருக்கிறது, இந்தியாவுக்கு எதிரான சீன போரை கடுமையாக கண்டித்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான், என்றார்,
கம்யூனிஸ்ட் நாடு என்பதால் சீனாவுக்கு ஆதரவாக இருக்க முடியாது, என்ரம் சமூகவலைதளங்களுக்கு தான் ஆதரவாக பேசுகிறோம் என்று அவர் தெரிவித்தார்,