ஊரடங்கின் போது ஓடாத வாகனங்களுக்கும் சாலை வரி வசூலிப்பதை கண்டித்து டிரைலர் லாரி உரிமையாளர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர், சென்னை புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சங்கத்தலைவர் நா,மனோகரன் தலைமை தாங்கினார், சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர், இது குறித்து தமிழ்நாடு டிரைலர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ந.மனோகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சென்னையில் கிட்டதட்ட 10 ஆயிரம் கனரக , கண்டையனர் லாரிகள் உள்ளன, கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த 100 நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஊரடங்கு உத்தரவை மதித்து நாங்களும் வாகனங்களை இயக்கவில்லை. இதனால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது, ஆனால் வாகனங்கள் இயக்கப்படாத தருணத்தில் சாலை வரி வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார், மேலும் ஊரடங்கு காலக்கட்டத்தில் பல்வேறு இழப்புகளை அனுபவித்து வரும் டிரையலர் உரிமையாளர்கள் வங்கிக்கடன்களை வசூலிக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது ஆனால் அதை மீறி வசூல் வேட்டை நடத்தி வருகிறார்கள், அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், மேலும் 15 ஆண்டு கால வாகனங்களையும் கிராப் செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்,
ஓடாத வாகனங்களுக்கு சாலை வரியா