பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஆராய 10 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது,
தமிழகத்தில் கொரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக மானியக்குழு அந்தந்த கல்வி நிலையங்களின் சூழ்நிலைக்கேற்ப தேர்வுகளை நடத்தி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது, இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செமஸ்டர்களை நடத்துவது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குமாறு உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையிலான குழு அமைத்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது, இது குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, இந்த குழுவுக்கு தொழிற்நுட்ப கல்வி ஆணையர் கன்வீனராக பணியாற்றுவார் என்று தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது,