தமிழக பாஜகவில் நடிகைகள் கெளதமி, நமிதா குட்டி பத்மினி போன்றவர்களுககு பதவிகளை வாரி வழங்கியதன் மூலம் வரும் சட்டமன்றத்தேர்தலில் அக்கட்சி 100 இடங்களுக்கு குறையாமல் பிடிக்கும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்,
தமிழக பாஜகவில் நடிகைகளுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன ஆனால் நீண்ட காலமாக கட்சியில் இருந்து வரும் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எந்த பதவியும் அளிக்கப்படவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகர், தமிழக பாஜகவில் நடிகைகளுக்கு பதவிகள் அளிக்கப்பட்டதன் மூலம் சரியான தலைவர்களை அக்கட்சியின் மாநிலத்தலைவர் முருகன் அடையாளம் காட்டியுள்ளார் என்றும் பெண்களுக்கு 33 சதவீதத்திற்கும் மேல் இட ஒதுக்கீடு அளித்துள்ளார் என்றும் இதன் மூலம் வரும் சட்டமன்றத்தேர்தலில் 100 இடங்களுக்கு மேல் பிடித்து சாதனை படைக்கும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் காமெடியாக அல்ல: சீரியசாகவே தெரிவித்துள்ளார்,