ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்களை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிலுவை என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் சீட்டு விளையாடியதாக தன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார், அந்த மனுவை விசாரித்த பொழுதுபோக்குக்காக சீட்டு விளையாடியதாக சிலுவையின் வாதத்தை ஏற்று அந்த வழக்கை ரத்து செய்தார் பணம் வைத்து விளையாடாமல் பொழுதுபோக்குக்காக விளையாடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று போலீசாருக்கு நீதிபதி புகழேந்தி அறிவுறுத்தினார் .மேலும் அவர் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதித்தது போல ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடைவிதிக்க வேண்டும் என்றும் வேலையில்லா இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்கும் வகையிலான விளையாட்டுக்களை தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்,