நகர்ப்புறங்களில் இருந்து கிராமப்புறங்களிலும் கொரோனா அலை வீசத்தொடங்கி விட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்,
இது குறித்து ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் சென்னையில் கொரோனாவை தடுக்க முடியாமல் குழுக்கள் அமைத்து அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பனிப்போர் அமைத்து தடுக்க முடியாத நிலை மற்ற மாவட்டங்களுக்கும் உருவானால் மக்களுக்கு பேராபத்து ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார், கடந்த வியாழக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் 2 ம்தேதி 4343 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 2320 பேர் சென்னை தவிர பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் 46 ஆக இருந்தது. என்றும் தற்போது வெளிமாவட்டங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை 357 என்ற அளவில் 7 மடங்கை தாண்டி விட்டதாகவும் குறை கூறியுள்ளார், , தமிழகத்தின் பிறமாவட்டங்களின் நோய்த்தொற்று எண்ணிக்கை 2688 ஆக இருந்தது இப்போது 28 ஆயிரத்து 361 ஆக அதிகரித்து 10 மடங்காக பெருகி உள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்,தற்போது எதுவுமே நடக்காதது போல் ஆட்சியாளர்கள் மணல் கோட்டை கட்ட நினைக்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார் சென்னை தவிர செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் மதுரை திருவண்ணாமவை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும் கொரோனா பரவத்தொடங்கியுள்ளது என்றும் 1000 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டமும் இடம் பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்,