இயக்குனர் பாரதிராஜாவுக்கு தாதா சாகீப பால்கே விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய விருது பெற்ற இயக்குனர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், வேண்டுகோள் விடுத்துள்ளனர்
தமிழ் திரை உலகில் புதிய அலைகளை தொடங்கி வைத்த இயக்குனர் பாரதிராசாவுக்கு இன்று 78 வது பிறந்தநாளாகும், இந்த நாளில் அவருக்கு மத்திய அரசின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே வழங்க வேண்டும் என்று தமிழ்த்திரையுலகினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இது குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகருக்கு புகழ் பெற்ற திரைபட இயக்குனர்கள், எழுத்தாளர்கள், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர், அதில் அவர்கள் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தென்னிந்தியாவின் இயக்குனர் இமயம் பாரதிராஜா தென்னிந்திய திரையுலகில் புதிய அலையை தொடங்கி வைத்தவர்,
1977 ஆ ம் ஆண்டு முதல் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 42 திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா வேலையில்லா திண்டாட்டம் , தீண்டாமை .சாதிய பாகுபாடு , பெண் சிசு கொலை போன்றவற்றை எதிர்க்கும் படங்களை இயக்கியவர் மகளிர் முன்னேற்றம் சமூக மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் என்று மனித உறவுகளை பெருமைப்படுத்தும் படங்களை இயக்கி படைப்பாளிகளை உத்வேகமூட்டும் சக்தியாக திகழ்கிறார்,
தமிழ் சினிமாக்களில் செட் அமைக்கும் கலாசாரத்தில் இருந்து மீட்டு முதன்முதலாக கிராமங்களுக்கு படப்பிடிப்பை கொண்டு சென்றவர் , மக்கள் வாழும் பகுதிகளில் திரைப்படங்களை உருவாக்கி புதிய புரட்சியை உருவாக்கியவர் பாரதி ராஜா நடிகர் திலகம்
சிவாஜி கணேசன் ராஜேஷ் கண்ணா, கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஸ்ரீதேவி நானாபட்கர், விஜயசாந்தி, ராதிகா ரதி அக்னஹோத்ரி , ரேவதி உள்ளிட்ட புகழ்பெற்ற நடிகர்களை இயக்கியுள்ள பாரதிராஜாவுக்கு பிறந்தநாள் பரிசாக தாதா சாகீப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று தேசிய விருதுகள் பெற்ற நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த் இயக்குனர்கள் மணிரத்னம் , சீனு ராமசாமி, சேது மாதவன், வெற்றி மாறன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானவர்கள் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்,