கல்விக்கொள்கைக்கு எதிராக கொந்தளிக்கும் தமிழகம்

மூன்றாம் வகுப்பு , ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வும்  பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வும் நடத்தும்    புதிய கல்விக்கொள்கைக்கு திமுக- பாமக உள்ளிட்ட   அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன, 


திமுக எதிர்ப்பு


 திமுக மாவட்ட செயலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:


.


நாடாளுமன்ற அமர்வு இல்லாத - கொரோனா பேரிடர் அனைத்து மாநிலங்களிலும் ஊடுருவி மக்களை வதைத்துவரும் இந்த நேரத்தில் - மக்கள் பிரதிநிதிகளின் விவாதத்திற்கே இடம் அளிக்காமல் - இக்கொள்கை குறித்து மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது.,


“மழலைக் கல்வியைக் கூட மத்திய அரசு முடிவு செய்யும்” என்கிற இந்த தேசியக் கல்விக் கொள்கை; திமுக அளித்த பரிந்துரைகளுக்கு எதிராக இருக்கிறது. ஆகவே, பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .


மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை” என்றும்; “சமூகநீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றைப் புறக்கணித்து, ஒருதலைப் பட்சமானதாக அமைந்துள்ள இந்த கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்” என்றும்; அ.தி.மு.க. அரசு தீர்மானமாக உடனே அறிவித்திட வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது


 


அன்புமணி ஆவேசம் 


*பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில்


தேசிய கல்விக்கொள்கையில் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 5ஆம் வகுப்பு வரை தாய்மொழி தான் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்; வாய்ப்பிருந்தால் அதை எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது படிப்படியாக பள்ளிக்கல்வி முழுமைக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி நடுநிலை வகுப்புகளிலேயே தொழிற்கல்வி அறிமுகம் செய்யப்படுவதும் வரவேற்கத்தக்கதே என்று பல்வேறு அம்சங்களை அன்பு மணி வரவேற்றுள்ளார்


., 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள  அன்புமணி , 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கே பொதுத்தேர்வு கூடாது.  கல்வி முன்னேற்றம் என்ற பெயரில் 3ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது கொடூரமானதாகும் என்று கண்டித்துள்ளார்,


வைகோ எதிர்ப்பு


மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் தலைமையில் அமைக்கப்படும் ‘ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக் எனப்படும் ‘தேசிய கல்வி ஆணையம்’ உயர் அதிகாரம் கொண்டதாக இருக்கும்.மழலையர் பள்ளியிலிருந்து உயர் கல்வி, ஆராய்ச்சி மையம் வரை ஒட்டுமொத்தக் கல்வித்துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கக்கூடிய அமைப்பாக தேசியக் கல்வி ஆணையம் இருக்கும். கல்விக் கொள்கை, நிதி ஒதுக்கீடு, கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, தர நிர்ணயம் வழங்குவது, பாடத் திட்டங்கள் உருவாக்கம் போன்ற அனைத்தும் இந்த ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்படும். மாநிலங்கள், தேசிய கல்வி ஆணையத்தின் உத்தரவுகளைக் கீழ்பணிந்து நிறைவேற்ற வேண்டும். மாநில அரசுகளுக்கு இனி கல்வித்துறை தொடர்பான எள்ளளவு அதிகாரம்கூட கிடையாது.மாநில உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சிக் கோட்பாட்டைச் சிதைக்கும் புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டுமா? என்று அவர் கேள்விஎழுப்பியுள்ளார்,


அழகிரி ஆவேசம்


தேசிய கல்விக்கொள்கையில் மும்மொழிக்கொள்கையில் மூன்றாம் மொழி என்பதில் முடிவு செய்ய வேண்டிய இடத்தில் தமிழகம் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் மேலும் கூறுகையில் நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் பல்கலைக்கழக பட்டப்படிப்பிலும் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பால் கிராமப்புற மாணவர்கள் நுழைய முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார் ,


வாசன் வரவேற்பு


,ஆழ்ந்த ஆய்வு, பரந்த கலந்துரையாடல், கல்வியாளர்களின் கருத்து அறிதலுக்குப்பின்பே , புதிய தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.. நவீன இந்தியாவை அறிவாற்றல் மிக்க இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் லட்சியத்தோடு வெளியிடப்பட்டுள்ளதாக தமாகா தலைவர் வாசன் வரவேற்றுள்ளார், மக்கள் நீதிமையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தேசிய கல்விக்கொள்கையில் கல்வித்துறைக்கு ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பை வரவேற்பதாகவும்  அதே போன்று சுகாதாரத்துறைக்கும் ஒரு சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தி  நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இதற்கிடையில்   வரும் ஆகஸ்ட் 4 ம்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,  புதிய கல்விக்கொள்கை குறித்து பள்ளிக்கல்வி உயர்கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது


 


 


\