திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் வெளியிட்டு மோசடி செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்
சென்னை அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ் .பாரதி, கந்தர் சஷ்டி கவசத்தை இழிவாக சித்தரித்த கருப்பர் கூட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும் என்பது போல் ஸ்டாலினின் டுவிட்டர் பதிவு என்ற பெயரில் மோசடியாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் இது குறித்து வரும் திங்கட்கிழமை சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்க இருப்பதாகவும் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் பாரதி எச்சரித்துள்ளார், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்று அனைத்து மதத்தினரும் திமுகவை ஆதரிப்பதை உளவுத்துறையினர் மூலம் அறிந்து கொண்டு அக்கட்சியின் மீது தவறான கருத்துக்களை திட்டமிட்டு உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்,