ஷாக்கடி்த்த கேள்விகள்

தமிழகத்தில் மின்கட்டணம் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் சென்னையில் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்விக்கணைகளை எழுப்பினர் அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார்,  4 மாதங்களுக்கான மின் கட்டணம் இரண்டு மாதமாக பிரித்து கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக விளக்கமளித்து  விட்டார் என்றும் நீதிமன்றமும் அதை  ஏற்றுக்கொண்டு விட்டது என்றும் மக்களும் மின்சாரத்தை பயன்படுத்தியதை உணர்ந்து, தாங்களாக முன்வந்து கட்டணத்தை கட்டி விட்டார்கள் என்றும் கூறியுள்ளார், மேலும் திமுக நடத்தும் போராட்டம் குறித்து எழுப்பப்பட்ட வினாவுக்கு விடையளித்த அமைச்சர் உதயகுமார், போராட்டத்திற்கான காரணங்களை தேடும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார், காரணங்களுக்காக போராடும் தலைவராக ஸ்டாலின் இல்லை என்றும்  விமர்சனம் செய்தார், மின்சார கட்டண விவகாரத்தை அவர் ஷாக்காமல் கையாள வேண்டும் என்றும் அவர் நகைச்சுவையாக தெரிவித்தார். முன்னதாக செய்தியாளர்கள் காரசாரமாக எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்   ஜாலி மூடில் பதிலளித்து கூல்லாக்கினார்