உயிர்காக்கும் மருந்து பதுக்கலா

கொரோனா நோய்த்தொற்று காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது என்று  அறிவிக்க வேண்டும் என்று  உலக சுகாதார நிறுவனத்திற்கு  32 நாடுகளை சேர்ந்த 239 அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்,  இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும் தும்மும் போதும்  அதன் மூலம் எழும் நீர்த்துளிகள் காற்றில் பரவி ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர், அதே சமயத்தில் இதற்கான மருந்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் வெளியிடும்படி கட்டாயப்படுத்த கூடாது என்று  தேசிய தொற்றுநோய் தடுப்பு கழகத்தை இந்திய அறிவியல் அகாடமியை சேர்ந்த நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர், 


இதற்கிடையில்  கிலிங் சயின்ஸ் நிறுவனத்தின் ரெம்டெசிவர் என்ற கொரோனா நோய்த்தொற்றுக்கு பயனளிக்கும் மருந்தை  அமெரிக்க நிறுவனம்  ஒன்று மூன்று மாதங்களுக்கு  பதுக்கி வைத்த திட்டமிருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு குற்றம் சாட்டியுள்ளது, இந்த மருந்தை ஐந்து நாட்களுக்கு உட்கொள்வதற்கான விலை 3000 அமெரிக்க டாலர் இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ 2 லட்சத்து 25 ஆயிரம் ஆகும், சலுகை விலையில் இந்தியாவுக்கு30 ஆயிரம் ரூபாயில் இருந்து 35 ஆயிரத்திற்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,ஆனால் அதன் உற்பத்தி விலை 750 ரூபாய் தான் என்றும் இந்த மருந்தை உற்பத்தி செய்யும் திறனை இந்திய உற்பத்தியாளர்கள் பெற்றிருக்கிறார்கள் என்றும் ரெம்டெசிவரை உற்பத்தி செய்வதற்கு கண்டுபிடிப்பு உரிமச்சட்டத்தின் அடிப்படை.யில் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு உரிமை இருக்கிறது, அதனை பெற்று தருவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது, இந்த நிலையில் ரெம்டெசிவர் விலை ரூ 30 ஆயிரத்தை தாண்டி இருப்பதாகவும் மருந்துகள் கிடைப்பதே அரியதாக இருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியிருக்கின்றனஸ