போட்டு தள்ளிய தமிழக ஐபிஎஸ்

உத்தரபிரதேசத்தில் ஆல் இந்தியா ரவுடியை போட்டுத்தள்ளிய தமிழக ஐபிஎஸ் அதிகாரி . தினேஷ்குமாரை சேலம் மாவட்டமே கொண்டாடி மகிழ்கிறது


உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் விகாஸ் துபே என்ற ரவுடியை பிடிக்க ஒரு டிஎஸ்பி தலைமையிலான எட்டு போலீசார் முற்றுகையில் ஈடுபட்டனர், ஏறக்குறைய கைது செய்து விடலாம் என்று நம்பிக்கையில் இருந்து  எட்டுத்துப்பாக்கி குண்டுகள், தீடீரென வெடித்து சிதறின, வெடித்து சிதறியது துப்பாக்கிக்குண்டுகள் மட்டுமல்ல: டிஎஸ்பி உள்ளிட்ட  போலீசாரும் தான், அடுத்தடுத்து போலீஸார் அனைவரும் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தனர், இந்த கொலை உத்தர பிரதேசத்தை மட்டுமல்ல: அகில இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது 


இப்போது விகாஸ் துபே பற்றி  ஒரு சின்ன பிளாஸ்பேக் 


வழக்கமாக எந்த ரவுடியாக இருந்தாலும் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முடியாது, ஆனால் விகாஸ் துபே அந்த வகை அல்ல:அவன் உத்தரபிரதேச அரசியல் வாதிகள் மற்றும் அதிகார வட்டாரத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவன் 1990 ஆம் ஆண்டுகளில் சின்னசின்ன குற்றங்களில் ஈடுபட்ட  துபே பிரபலமானது , 2001 ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த  இரட்டை கொலையில் சிக்கியபோது தான் அதற்கு பின்னர் தான் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அரங்கேற தொடங்கியது ராஜ்நாத் சிங் அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர், சந்தோஷ் சுக்லா, இவர் கான்பூர் மாவட்ட ஷ்வ்லி காவல்நிலையத்திலேயே  ரத்த வெள்ளத்தில் கதற கதற சுட்டுவீழ்த்தப்பட்டார்.மந்திரியாக இருந்தபோதே, கிட்டதட்ட 60 போலீசார் முன்னிலையில் சுக்லா இரண்டு போலீஸாருடன் படுகொலை செய்யப்பட்டார், இந்தியாவை அதிர வைத்த  இந்த கொலை வழக்கில் துபேவுக்கு எதிராக சாட்சியமளிக்க யாரும் தயாராக இல்லை.  விளைவு  கொலை வழக்கில் துபே விடுதலையானான்,   அப்போது பகுஜன்சமாஜ்- பாஜக கூட்டணி மந்திரிசபை உத்தரபிரதேசத்தில் நடந்து கொண்டிருந்தது,  மந்திரியை இழந்த பாஜகவே கூட மேல் முறையீடு செய்யவில்லை அதுபற்றி யாரும் மூச்சு கூட விடவில்லை, 


இதன் பின்னர் உத்தரபிரதேசத்தில் ஆட்சிகள் மாறின, ஆனால் காட்சிகள் என்னவோ மாறவே இல்லை. முதலமைச்சர் யோகி ஆட்சியில் பல என்கெளண்ட்டர்கள் மும்முரமாக நடந்தன, ஆனால் இந்த என்கெளண்ட்டர்களில் துபேவோ அவனது கூட்டாளிகளோ சிக்கவில்லை, அந்தளவுக்கு அரசியல் - அதிகாரிகள் மட்டத்தில் செல்லப்பிள்ளையாக திரிந்தான் துபே  அவனது காலில் அரசியல் வாதிகள் மட்டுமல்ல: காவல்துறையினரும் நெடுஞ்சாண்கிடையாக  விழுந்து கிடந்தனர், 
இந்த நிலையில்  அதிகார வட்டாரத்தின் ஆசியோடு இருந்த துபே நடத்திய டிஎஸ்பி.படுகொலை காவல்துறையை அதிர வைத்தது, 
இனி பொறுப்பதற்கில்லை என்று முடிவெடுத்த கான்பூர் மாவட்ட காவல்துறைக்கு பன்மடங்கு படைபலத்தோடு துபே கோஷ்டியை நெருங்கினர் அவனது கூட்டாளிகள் 5 பேரை கொன்று துவம்சம் செய்தனர், இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜனியில் போலீஸ் வைத்த வலையில் சிக்கினான் துபே,  மந்திரி,  டி.எஸ்.பி. கொலை என்று  ஹிட் லிஸ்ட் போட்டு வரும் துபேவை என்கெளண்ட்டர் லிஸ்ட்டில் போட்டு தள்ளியது  கான்பூர் போலீஸ் . இந்த  என்கெளண்ட்டருக்கு வித்திட்டவர் கான்பூர் மாவட்ட  சிறப்பு எஸ்.பி. தினேஷ் குமார்,  இவர் வேறு யாரோ அல்ல:  மாம்பழத்திற்கு பேர் போன சேலம் மாவட்டம் கொளத்தூருக்கு அருகே உள்ள மலைப்பகுதியான சின்ன தண்டா  கிராமத்தை சேர்ந்த 34 வயது இளைஞர் , தொலைக்காட்சியை பார்த்து என்கெளண்ட்டர் விவகாரத்தை தெரிந்து கொண்ட கிராமத்து மக்கள் , தினேஷ்குமாரின் வீட்டுக்கு படையெடுத்து வரத்தொடங்கி விட்டனர்,  இவரது அப்பா, பிரபு கவுண்டர், விவசாயி,  இந்த கிராமத்தின் முதல் பட்டதாரி முதல் ஐபிஎஸ் அதிகாரியாக தினேஷ்குமார் ஊர் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்,  அம்மா சுபத்ரா தனது மகனை உச்சிமோந்து புகழ்கிறார், அவன் எப்போதுமே நேர்மையை தான் விரும்புவான் குழந்தை பருவத்தில் இருந்தே என்கிறார்


மற்றொரு கிராம வாசி எங்க கிராமத்து ஐபிஎஸ் தினேஷ்குமார் தமிழகத்து இளைஞர்களுக்கெல்லாம் ரோல் மாடலாகி விட்டார் என்று மகிழ்கிறார், துாத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி , தினேஷ் தன்னுடைய பேட்ச்மேட் தான் சராசரியான மாணவர் தான், நண்பர்களோடு ஜாலியாக அரட்டை அடிப்பது அவருக்கு  ரொம்ப பிடிக்கும், அவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு ஆக்கி . அதில் அலாதியான பிரியம் கொண்ட சிறந்த விளையாட்டு வீரர் என்கிறார், ஆல் இந்தியா ரவுடியை என்கெளண்ட்டர் செய்து உத்தரபிரதேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் . தினேஷ்குமாரை \சேலம் மாவட்டத்தின் சின்னஞ்சிறு மலைக்கிராமம் மட்டுமல்ல: தமிழகமே கொண்டாடி வருகிறது, ஆனால் இந்த என்கெளண்ட்டர் மூலமாக அந்த மாநில அரசு துபேவை மொத்த  அரசியல்   அதிகார பின்னணியை  அம்பலப்படுத்தாமல் விட்டு விட்டது என்று   உத்தரபிரதேச  அரசியல்வாதிகள் அங்கலாய்கிறார்கள்,