கொரோனா நோய்த்தொற்று பற்றி நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியாது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்,
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சரிடம் , கொரோனா நோய் கிராமங்களில் பரவி விட்டதாகவும், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்று கமல்ஹாசன் குறை கூறியிருப்பதாக வினா எழுப்பப்பட்டது, இதற்கு விடையளித்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கொரோனா பரிசோதனை எல்லா இடங்களிலும் செய்வது கிடையாது, கிட் போட்டு தான் இந்த சோதனையை செய்ய முடியும், அவருக்கு இந்த நோய் பற்றி தெரியாது. இந்த நோயின் வீரியம் பாதிப்பு போன்றவை பற்றி உங்களுக்கு தெரியும், கொரோனா நோயை பரிசோதனை செய்யும் டாக்டரே தகுந்த உடைகளை அணிந்து செய்ய முடியும்,எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செய்ய முடியாது அதற்கென்று தனி மருத்துவமனைகள் வைத்திருக்கிறோம், தனியார் மருத்துவமனைகளில் கூட கொரோனா சிகிச்சையளிக்க முடியாது அதற்கு தகுந்த வசதிகள் இருந்தால் தான் அரசு அதை அனுமதிக்கும், இல்லையேல் எல்லா இடங்களிலும் நோய் பரவல் ஏற்பட்டு விடும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்,
31 ம்தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்குமா என்று எழுப்பப்பட்ட மற்றொரு வினாவுக்கு விடையளித்த முதலமைச்சர் , மத்திய மாநில அரசுகளும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதை பொறுத்து தான் நாமும் மேற்கொள்ளமுடியும் என்று தெரிவித்தார்,