ஓபிஎஸ் பதிவால் திடீர் திருப்பம்

2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில்
மகத்தான வெற்றி பெறுவது ஒன்றேஅ.தி.மு.கவின் இலக்கு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது  புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது,  


முதலமைச்சர் வேட்பாளர்  பிரச்னை அதிமுகவில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது  தேர்தலுக்கு பின்னர் சட்டபேரவை உறுப்பினர்கள் கூடி  கட்சித்தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பார்கள் என்று வழக்கமாக கட்சியினர் கூறும் வித்தையை அமைச்சர் செல்லுார் கே.ராஜூவும் கையாண்டியுள்ளார், அதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , தேர்தலுக்கு முன்பு இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்றும்  இல்லையேல் எதிர்காலத்தில் குதிரை பேரத்திற்கு வழிவகுத்து விடும் என்றும் தெரிவித்தார், அடுத்தடுத்து அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்துக்களை தெரிவித்தனர், இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது, இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைதியலிங்கம் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர், 


இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி,, அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் உரிய காலத்தில்  கட்சியின் முன்னணித்தலைவர்கள் கூடி முடிவெடுத்து அறிவிப்பார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார், இந்த நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்  தனது சுட்டுரை ( டுவிட்டர் பதிவு) ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில்
மகத்தான வெற்றி பெறுவது ஒன்றேஅ.தி.மு.கவின் இலக்கு. அதுவே
ஜெயலலிதாவின்  கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம்,
கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்ன சொல்ல வருகிறார் என்பதை அதிமுகவினர் தெளிவாக புரிந்துக்கொண்டிருப்பார்கள் என்றே நம்பலாம் இதற்கிடையில் சமூக வலைதளங்களில் அதிமுகவினர் என்றும் ஒரே தலைவர், நாளைய வரலாறே என்றெல்லாம் புகழாரம் சூட்ட தொடங்கியுள்ளனர்